BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
ஹோர்முஸ் நீரிணையை இரான் மூடினால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு என்ன பாதிப்பு?
ஆயதுல்லா அலி காமனெயியின் மறைவுக்குப் பிறகு, உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக இரான் விடுத்துள்ள அச்சுறுத்தல், சர்வதேச கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதோடு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இரான் கப்பல் மூழ்கியதற்கு நீர்மூழ்கி தாக்குதல் காரணமா? - இலங்கை கடற்படை பதில்
இரானின் கடற்படை கப்பல் ஒன்று இலங்கையின் காலே துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் கண்டறியப்பட்டுள்ளது.
"ஸ்பெயினுடன் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துகிறோம்" - டிரம்பின் அச்சுறுத்தலுக்கான எதிர்வினை என்ன?
இரான் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதன் இராணுவ தளங்களைப் பயன்படுத்துவதை அமெரிக்கா தடை செய்ததை அடுத்து, ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
காமனெயி மரணம் பாகிஸ்தான் உள்பட இஸ்லாமிய உலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டார். 86 வயதான காமனெயி இரானின் உச்ச தலைவராக இருந்தபோதிலும், இரானுக்கு வெளியே பாகிஸ்தான், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ஷியா சித்தாந்தத்தில் அவரைப் பின்பற்றுபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியாவின் ஷியா சமூகமும் அவரை தங்கள் உச்ச தலைவராகக் கருதுகிறது.
'இந்தியர்கள் பணிபுரிந்த 4 கப்பல்கள் மீது தாக்குதல்' - மாலுமிகளின் நிலை என்ன?
"இந்தத் தாக்குதலில் நான்கு கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கப்பலிலும் சுமார் 25 மாலுமிகளுக்கும் மிகாமல் உள்ளனர். அவர்களில் கணிசமானோர் இந்தியர்கள் ஆவர். நெட்வொர்க் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது"
'இந்தியாவை விட சிறந்த சுழலை கொண்டுள்ள இங்கிலாந்து அரையிறுதியில் வெல்லும்'
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இங்கிலாந்து அணி இந்தியாவை விட சிறந்த ஸ்பின் அட்டாக்கைக் கொண்டுள்ளதாகவும், மும்பையில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடக்கும் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஹாரி புரூக் தலைமையிலான அணி வெற்றி பெறும் என்று தமக்கு ஒரு 'விசித்திரமான உணர்வு' இருப்பதாகவும் கூறுகிறார்.
உடல் எடையை குறைக்க பழங்களை மட்டுமே உண்ணும் 'ஃப்ருடேரியன் டயட்' சிறந்ததா?
உடல் பருமன் பிரச்னை கடந்த சில ஆண்டுகளில் பெருகிவரும் நிலையில் உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட் முறைகள் பரவலாக பின்பற்றப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் பழங்களை மட்டுமே சாப்பிடும் ஃப்ருடேரியன் உணவுமுறை. இதிலுள்ள பிரச்னைகள் என்ன?
இரான்: பள்ளி தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளுக்கு இறுதிச்சடங்கு - தாய், தந்தையர் கண்ணீர்
தெற்கு இரானில் உள்ள ஒரு பள்ளியின் மீது அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இரானிய அதிகாரிகள் கூறும் நிகழ்வில் கொல்லப்பட்ட மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. தங்கள் மகள்களை இழந்த தாய்மார்கள் மற்றும் தந்தையரின் துயரத்தை பின்னணியில் ஒருவர் விவரித்துக் கொண்டிருக்க, இஸ்லாமியக் குடியரசின் தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் கூட்டத்திற்கு நடுவே சுமந்து செல்லப்பட்டன.
நேரலை, டிரம்ப் பேச்சுவார்த்தைகளை 'சொத்து பரிவர்த்தனை' போல நடத்தினார் - இரான் குற்றச்சாட்டு
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
இரானின் பதிலடி தாக்குதல் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பின் திறன் பற்றி எழுப்பும் கேள்விகள்
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை இரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பது அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பில் உள்ள பலவீனங்களை அம்பலப்படுத்தியது. வெளிப்படையாக, இது அமெரிக்காவிற்கும் பிராந்தியத்தில் உள்ள அதன் கூட்டாளி நாடுகளுக்கும் கவலை அளிக்கும் செய்தியாக இருக்கும்.
இரான் மீதான தாக்குதல்களின் சுமையை தாங்கும் அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள்
சனிக்கிழமை காலை தொடங்கியதிலிருந்து, இரான் தனது இலக்குகளை விரிவுபடுத்தியதாகத் தெரிகிறது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவுத் தலைமையகம் போன்ற ராணுவ இலக்குகளைத் தாக்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், விமான நிலையங்கள் மற்றும் பிற சிவில் இடங்களையும் அது இப்போது குறிவைக்கிறது.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
இந்தியாவில் ரயில்களில் 'பயணிக்கும்' ராஜநாகங்கள் - புதிய ஆபத்து பற்றி எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள் ராஜநாகத்தின் இயற்கையான வாழ்விடமாக உள்ளன. ராஜநாகம் பொதுவாகக் காடுகளில் வாழ்கிறது, ஏனெனில் அங்கு அதற்குத் தேவையான இரை, நீர் மற்றும் பாதுகாப்பான இடம் கிடைக்கிறது.
எகிப்தில் மன்னர் பள்ளத்தாக்கில் கிரேக்கத்துக்கு மேலே தமிழை பொறித்த 'சிகை கொற்றன்' யார்?
எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை எழுதியது யார்?
அரவிந்தர் கோஷ் புதுச்சேரி வந்தது ஏன்? சுதந்திர போராட்ட வீரர் ஆன்மீகவாதியான கதை
1893-ல் அரவிந்தர் இந்தப் பெயரைத் தனது பெயரிலிருந்து நீக்கினார். 1879-இன் மத்தியில், கிருஷ்ண தன் தனது முழு குடும்பத்துடன் இங்கிலாந்துக்குச் சென்றார்.
பெரிய மார்பகங்கள் பெண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கலாம்?
உலகின் பல பகுதிகளில் பெரிய மார்பகங்கள் இருப்பது கவர்ச்சிகரமான விஷயமாக கருதப்பட்டாலும், உண்மை கடினமானதாக உள்ளது. பெண்களின் ஆரோக்கியத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் அது குறிப்பிடத்தக்க பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
கோவையில் காண்டாமிருகம் வாழ்ந்ததா? தொல்லியல் ஆய்வில் கிடைத்த ஆதாரம்
சமீபத்தில் கோவை அருகே நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த எலும்பு காண்டாமிருகத்துடையது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இது இன்னமும் நிரூபிக்கப்ப வேண்டியது உள்ளது என விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"ராஜராஜ சோழனின் உண்மையான பெயர்" ; சோழர்கள் வடமொழியில் பெயர் சூட்டிக் கொண்டனரா?
சோழ மன்னர்களின் காலம், அந்தக் காலத்தில் இருந்த சமூக அமைப்பு, நிலவுடைமை, சமூகத்தின் எந்தப் பிரிவுக்குச் சாதகமாக இருந்தார்கள் என்பதெல்லாம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்துவருகின்றன.
ரூ.100 கோதுமை திருடியதாக 45 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் ஒருவர் கைது - என்ன நடந்தது?
இந்த வழக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாவட்டத்தின் பல்க்வாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்சமுந்த் காகட் கிராமத்தில் 100 ரூபாய் மதிப்புள்ள கோதுமையைத் திருடியது தொடர்பானது.
சௌதி அரேபியா லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க தீர்மானித்தது ஏன்?
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வழங்கப்போவதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது. நாட்டின் இந்த விலைமதிப்பற்ற விலங்குகளைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
வங்கதேசத்துடன் அமெரிக்கா செய்த வர்த்தக ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன நெருக்கடி?
அமெரிக்கா - வங்கதேசம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான சில மணிநேரங்களிலேயே, இந்திய ஜவுளி மற்றும் பருத்தி நிறுவனங்களின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக வீழ்ச்சியடைந்தன. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ஆடை சந்தையில் இந்தியாவின் நிலை பலவீனமடையக்கூடும் என்ற கவலைகள் எழுப்பப்படுகின்றன.
சார்ல்ஸ் டார்வின் 'கடவுளை கொன்று' பரிணாம கோட்பாட்டை கண்டுபிடிக்க வித்திட்ட பீகிள் கடற்பயணம்
இயற்கை விஞ்ஞானி சார்ல்ஸ் டார்வின் தனது பரிணாமவியல் கோட்பாட்டைக் கண்டுபிடிக்க தொடக்கப் புள்ளியாக இருந்தது பீகிள் கடற்பயணம். அந்தப் பயணத்தில் அவர் என்னவெல்லாம் பார்த்தார், எப்படிப்பட்ட அனுபவங்களைப் பெற்றார்?
"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்
தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையறை அற்ற வேலைக்கான உரிமம் பெறுவதற்கான கால அளவு 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரிட்டன் உள்துறை செயலர் முன்மொழிந்துள்ளர். இந்த முடிவு பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



























































































