காணொளி: எப்ஸ்டீன் கோப்புகளில் கிளிண்டன் புகைப்படம் - அவரே அளித்த விளக்கம்

காணொளிக் குறிப்பு, காணொளி: எப்ஸ்டீன் கோப்புகளில் தனது புகைப்படம் குறித்து விளக்கமளித்த பில் கிளிண்டன்
காணொளி: எப்ஸ்டீன் கோப்புகளில் கிளிண்டன் புகைப்படம் - அவரே அளித்த விளக்கம்

எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான சர்ச்சை குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஒரு அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.

"இந்த புகைப்படம் பற்றி விவரங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா அல்லது இந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஞாபகம் இருக்கிறதா?" எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு,

"இல்லை, இந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது எனக்குத் தெரியாது என்று நினைக்கவில்லை. இது எங்கே எடுக்கப்பட்டது என்பதில் ஓரளவுக்கு எனக்கு நிச்சயம் இருக்கிறது.

இதனுடன் தொடர்புடைய மற்றொரு புகைப்படம் உங்களிடம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்தப் படத்தைப் பார்த்தால், யாரோ தங்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றுதான் மக்கள் நினைப்பார்கள். எது எப்படியோ, இந்தப் படம் புருனேயில் எடுக்கப்பட்டது."

"நான் அங்கு வரப்போகிறேன் என்று தெரிந்ததும், எனது 'எய்ட்ஸ் விழிப்புணர்வு முயற்சிக்கு' உதவ விரும்புவதாக அவர் (எப்ஸ்டீன்) கூறினார். என்னை அங்கு தங்குமாறு அழைத்தார். "நீங்கள் இந்த ஹோட்டலில் தங்க வேண்டும். நீச்சல் குளத்தைப் பயன்படுத்துவீர்கள் என கருதுகிறேன்", என்று அவர் கூறினார்.

அதன்படியே நானும் செய்தேன். பிறகு நீச்சல் குளத்திலிருந்து வெளியே வந்து, களைப்பில் படுக்கைக்கு சென்றுவிட்டேன்." என பில் கிளிண்டன் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு