காஸாவில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதி – மக்களின் கொண்டாட்டத்தை காட்டும் 10 படங்கள்

காஸா அமைதி திட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸா அமைதி திட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டது.
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன.

காஸாவில் இரண்டு ஆண்டுகளாக தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவில் கொண்டாடிய மக்கள்.

பட மூலாதாரம், Getty Images

இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் மூலம் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் எனவும், இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும் என்றும் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் பற்றிய செய்திகள் வெளியானதை அடுத்து காஸாவிலும் இஸ்ரேலிலும் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடினர்.

காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல், காஸாவின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இஸ்ரேலிய படைகள் பின்வாங்க வேண்டும்.

அதன்பிறகு, ஹமாஸ் தங்களிடம் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டிய 72 மணி நேர நிபந்தனை நேரம் தொடங்கும்.

பணயக்கைதிகளை விடுவிக்க 72 மணி நேரம் அவகாசம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பணயக்கைதிகளை விடுவிக்க 72 மணி நேரம் அவகாசம்.

அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு காஸா மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக்கைதிகளாக ஹமாஸால் பிடித்துச் செல்லப்பட்டனர்.

பதிலுக்கு காஸாவில் இஸ்ரேல் தொடங்கிய போரில், இதுவரை 67,100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67,100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67,100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸா போர்

பட மூலாதாரம், Reuters

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதற்கட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அடுத்த கட்டங்களின் விவரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஆனால், அது தொடர்பான உடன்பாட்டை எட்டுவது கடினமாக இருக்கலாம்.

இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட பின், போர் உடனடியாக முடிவுக்கு வரும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட பின், போர் உடனடியாக முடிவுக்கு வரும்
காஸா போர்

பட மூலாதாரம், Reuters

டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி நிபுணர்கள் கொண்ட டிரம்ப் தலைமையிலான குழு தற்காலிகமாக காஸாவில் நிர்வகத்தை கவனித்துக்கொள்ளும். முன்னாள் பிரிட்டன் பிரதமர் சர் டோனி பிளேர் பிற தலைவர்களுடன் சேர்ந்து இந்த ஆட்சிக் குழுவில் ஒரு பகுதியாக இருப்பார்.

பின்னர், காஸாவின் நிர்வாகம் பாலத்தீன அதிகார சபைக்கு மாற்றப்படும். டிரம்பின் திட்டப்படி, எதிர்காலத்தில் ஹமாஸ் காஸாவின் நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கேற்க முடியாது.

முன்னாள் பிரிட்டன் பிரதமர் சர் டோனி பிளேர் ஆட்சிக் குழுவில் இடம்பெறுவார்.

பட மூலாதாரம், Getty Images

மற்றொரு முக்கிய விஷயமாக இஸ்ரேலிய ராணுவத்தை பின்வாங்குவது உள்ளது. முதற்கட்டமாக காஸாவின் 53 சதவீத பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என வெள்ளைமாளிகையின் திட்டம் கூறுகிறது.

பின்னர் இது அடுத்த கட்டங்களில் 40 சதவீதம் மற்றும் 20 சதவீதமாக பின்வாங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக காஸாவின் 53 சதவீத பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதற்கட்டமாக காஸாவின் 53 சதவீத பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்

இதில் இந்தப் படைகள் பின்வாங்குவது பற்றி தெளிவான காலக்கெடுவை இந்தத் திட்டம் வழங்கவில்லை. இது தெளிவுபடுத்த வேண்டுமென ஹமாஸ் விரும்புகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு