காணொளி: நேட்டோவுக்கு நிபந்தனை விதித்த டிரம்ப்: இந்தியா, சீனாவுக்கு குறியா?
காணொளி: நேட்டோவுக்கு நிபந்தனை விதித்த டிரம்ப்: இந்தியா, சீனாவுக்கு குறியா?
ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் நேட்டோ நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓர் நிபந்தனையை முன் வைத்துள்ளார்.
சனிக்கிழமை ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப், "நேட்டோ நாடுகள் தயார் என்றால், ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்க நான் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்தார்.
எனினும், "ரஷ்யா எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும்" என்ற நிபந்தனை விதித்த டிரம்ப், "ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது, உங்கள் பேரம் பேசும் அதிகாரத்தையும் பலவீனப்படுத்தும்" எனவும் தெரிவித்தார்.
இதனால், இந்தியா, சீனா மீது அழுத்தம் அதிகரிக்குமா? டிரம்ப் கூறியது என்ன? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



