காணொளி: ஓட்டுநரே இல்லாமல் ஏஐ மூலம் இயங்கும் ஹைடெக் பைக்

காணொளிக் குறிப்பு, ஏஐ மூலம் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் ஹைடெக் பைக்
காணொளி: ஓட்டுநரே இல்லாமல் ஏஐ மூலம் இயங்கும் ஹைடெக் பைக்

ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஓட்டுநர் இல்லாமையே இயங்கும் ஹைடெக் பைக்கை குஜராத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குஜராத்தின் சூரத்தில் மூன்று மெக்கானிக்கல் இஞ்சினீரிங் மாணவர்கள் இந்த அதிநவீன எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளனர்.

இந்த பைக்கின் பாதி பாகங்கள் பழைய இரும்பில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு வருட கடுமையான உழைப்புக்கு பிறகு, சுமார் 1.8 லட்சம் ரூபாய் செலவில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

"இந்த பைக் மூலம் ஈகோ மோடில் 220 கி.மீ., ஸ்போர்ட்ஸ் மோடில் 160 கி.மீ. வரை பயணிக்க முடியும். அதன் லித்தியம் பேட்டரி வெறும் 2 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும்."

இந்த பைக் தற்போது சோதனை கட்டத்தில் உள்ள நிலையில் அடுத்தகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு