காணொளி: 'பெரிய முன்னேற்றம்' - காஸா அமைதித் திட்டம் குறித்து டிரம்ப்

காணொளிக் குறிப்பு, 'பெரிய முன்னேற்றம்' - காஸா அமைதித் திட்டம் குறித்து டிரம்ப்
காணொளி: 'பெரிய முன்னேற்றம்' - காஸா அமைதித் திட்டம் குறித்து டிரம்ப்

காஸா அமைதித் திட்டம் குறித்து பேசியுள்ள டிரம்ப், "நாம் பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறோம்.

இதெல்லாம் நடக்க வேண்டும் என இஸ்ரேல் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களில், குறிப்பாக பணயக்கைதிகளின் குடும்பங்கள் அக்கறை கொண்டுள்ளனர். அதுபோன்ற ஆயிரக்கணக்கானோரை இஸ்ரேலில் காணலாம்.

அவர்கள் உண்மையில் பணயக்கைதிகள் மீண்டும் வர வேண்டும், இது முடிய வேண்டும் என விரும்புகின்றனர்.

ஹமாஸ் சரியாக நடந்துகொள்கிறார்கள் என நினைக்கிறேன்.

அவர்கள் சரியாக நடக்கின்றனர். இப்படியே இது தொடரும் என நம்புகிறேன். அது நடக்கும்.

ஒரு ஒப்பந்தம் செய்யப்போகிறோம் என உறுதியாக நம்புகிறேன்.

ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது, அது நீடிக்கும் ஒப்பந்தமாக இருக்கும்." என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், பேச்சுவார்த்தைகளில், ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுவது போன்ற ஏதேனும் வரம்புகள் உள்ளதா?" என கேள்வியெழுப்பினார்.

அதற்கு, "எனக்கு சில வரம்புகள் இருக்கின்றன.

சில முக்கியமான விஷயங்கள் நிறைவேறவில்லை எனில் நாங்கள் ஒப்பந்தம் செய்யவே மாட்டோம்.

ஆனால், நாங்கள் சிறப்பாக செய்கிறோம் என நினைக்கிறேன். மேலும் ஹமாஸ் முக்கியமான விஷயங்களில் ஒப்புக் கொள்கிறார்கள்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு