இங்கிலாந்தில் 53 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கழிப்பறை திருட்டு - எங்கே?

காணொளிக் குறிப்பு,
இங்கிலாந்தில் 53 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கழிப்பறை திருட்டு - எங்கே?

இந்திய மதிப்பில் சுமார் 53 கோடி மதிப்புள்ள கழிப்பறை இருக்கை பிரிட்டனில் திருடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பிளென்ஹெய்ம் அரண்மனையில் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்த வழக்கு விசாரணையில் ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் சிசிடிவி காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.

ஆயுதம் ஏந்திய முகமூடி அணிந்த நபர்கள் அரண்மனைக்குள் நுழைவதையும், ஒருவர் தங்க கழிப்பறை இருக்கையை எடுத்துச் செல்வதயும் அந்த காட்சிகளில் காணமுடிகிறது.

இந்த வழக்கு பற்றிய கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)