கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நேருக்கு நேர் குற்றம் சாட்டிய ஷி ஜின்பிங்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நேருக்கு நேர் குற்றம் சாட்டிய ஷி ஜின்பிங்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் முகத்துக்கு நேராகக் குற்றம் சாட்டிப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த அரிய சம்பவம் இந்தோனீசியாவின் பாலி நகரில் தற்போது நடந்து முடிந்துள்ள ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டின்போது நிகழ்ந்தது.
மாநாட்டின்போது இரண்டு தலைவர்களும் மூடிய அறைக்குள் பேசிக்கொண்ட விஷயங்கள் ஊடகங்களில் கசிந்தது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் மொழிபெயர்ப்பாளர் உதவியோடு குற்றம் சாட்டிப் பேசினார்.
கனடா தேர்தலில் சீனா உளவு பார்த்ததாகவும் தலையீடு செய்ததாகவும் கூறப்படுவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போது ட்ரூடோ பேசியதாக செய்திகள் வெளியாயின. இந்த செய்திகள் பற்றிக் குறிப்பிட்டு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளார் ஷி ஜின்பிங்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



