ஆந்திராவில் அரசு அலுவலகத்தில் பெண் ஊழியர் கடத்தல்
ஆந்திராவில் அரசு அலுவலகத்தில் பெண் ஊழியர் கடத்தல்
ஆந்திராவில் ஒரு பெண் அரசு ஊழியர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து கடத்தப்படும் காட்சி வெளியாகி உள்ளது. தேவிபட்டணம் மண்டலத்தின் சரபவரம் கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் சௌமியா என்ற பெண்ணை கடந்த 7ஆம் தேதி சிலர் காரில் வந்து கடத்தியதாக போலீஸார் கூறுகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருப்பதாக கூறிய தேவிபட்டணம் எஸ்ஐ ஷெரீப், சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும், கடத்தப்பட்ட பெண்ணையும் தேடி வருவதாகவும், கடத்தலுக்கான காரணத்தை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



