காணொளி: புதின், நெதன்யாகுவின் நெருக்கடிகளை சமாளிப்பாரா டிரம்ப்?

காணொளிக் குறிப்பு, டிரம்பின் செல்வாக்கு சரிகிறதா?
காணொளி: புதின், நெதன்யாகுவின் நெருக்கடிகளை சமாளிப்பாரா டிரம்ப்?

24 மணி நேரத்திற்குள் நடந்த 2 சம்பவங்கள் அமெரிக்க அதிபர் டிரம்பின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு பெரும் சவால்களாக மாறியுள்ளன.

கத்தார் மீது இஸ்ரேல் நடத்தி வான் தாக்குதல் மற்றும் போலீந்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் வெள்ளை மாளிகைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

காஸா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் தனது சமீபத்திய பரிந்துரைகளை வழங்கியிருக்கும் நிலையில், தோஹாவில் இஸ்ரேல் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.

இதன்மூலம் காஸா விவகாரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு கேள்விக்குறியாகிவுள்ளது.

முழு விவரம் காணொளியில்..

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு