கனமழையால் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம், அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

காணொளிக் குறிப்பு, விசாகபட்டினத்தில் பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்
கனமழையால் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம், அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெய்த கனமழையில் இரு சக்கர வாகனங்களை அடித்துச் செல்லப்படும் அளவுக்கு சாலையில் மழை நீர் ஆறு போல ஓடியது.

விசாகப்பட்டினத்தின் பல பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்த நிலையில் KRM Colony-ல் இந்த சம்பவம் நடந்தது.

அதிக வெப்பத்தால் cumulonimbus எனப்படும் மேகங்கள் உருவாகி திடீர் மழையை ஏற்படுத்தியுள்ளதாக விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையத்தை சேர்ந்த அதிகாரி ஜெகன்நாத் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு