தனித் தமிழ் நாடு அமைக்க ஆசைப்பட்டாரா வீரப்பன் ? முத்துலட்சுமி சொல்வது என்ன ?

காணொளிக் குறிப்பு, வீரப்பன் மரணம் தொடர்பாக இன்றளவும் மர்மங்கள் நீங்காமல் உள்ளன.
தனித் தமிழ் நாடு அமைக்க ஆசைப்பட்டாரா வீரப்பன் ? முத்துலட்சுமி சொல்வது என்ன ?

சந்தனமரக்கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 19 ஆண்டுகளாகியும், அவர் மரணம் தொடர்பாகவும், அவர் செய்த கொலைகள் தொடர்பாகவும் இன்றளவும் மர்மங்கள் நீங்காமல் உள்ளன. வீரப்பன் உயிருடன் இருந்தபோது தன்னிடம் பகிர்ந்தவற்றை பிபிசி உடனான நேர்காணலில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பகிர்ந்துகொண்டார்.

மேலும், வீரப்பன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறித்து பேசிய முத்துலட்சுமி, திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியை பயன்படுத்தி வீரப்பனை காட்டிற்குள் இருந்து வெளியே கொண்டு வந்து என்கவுண்டர் செய்திருக்கலாம் என குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த கொளத்தூர் மணி, அதில் உண்மையில்லை எனக் கூறியுள்ளார்.

வீரப்பன், கொளத்தூர் மணி, முத்துலட்சுமி

பட மூலாதாரம், SIVASUBRAMANIYAM/KOLATHUR MANI/BBBC

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: