இலங்கையில் மண் சரிவு- குறைந்தது 6 பேர் பலி

காணொளிக் குறிப்பு, இலங்கையில் மண் சரிவு- குறைந்தது 6 பேர் பலி
இலங்கையில் மண் சரிவு- குறைந்தது 6 பேர் பலி

இலங்கை கண்டியின் கடுகண்ணாவ பகுதியில் சனிக்கிழமை (நவம்பர் 22) ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. இந்த மண்சரிவில் மேலும் நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

உணவகம் ஒன்றிற்கு பின்புறத்திலுள்ள மலையொன்றில் இருந்த பாரிய கல்லொன்று சரிந்துள்ளதை அடுத்து, இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மீட்பு பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டபோதிலும் அப்பகுதி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு