"தி காஷ்மீர் ஃபைல்ஸ் அருவருக்கத்தக்க படம்" - இஸ்ரேலிய இயக்குநரின் கருத்துக்கு எதிர்வினை

காணொளிக் குறிப்பு, "தி காஷ்மீர் ஃபைல்ஸ் அருவருக்கத்தக்க படம்" - இஸ்ரேலிய இயக்குனரின் கருத்துக்கு எதிர்வினை
"தி காஷ்மீர் ஃபைல்ஸ் அருவருக்கத்தக்க படம்" - இஸ்ரேலிய இயக்குநரின் கருத்துக்கு எதிர்வினை

தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தி திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 'பனோரமா' பிரிவில் திரையிடப்பட்டது குறித்து அதன் விருது தேர்வுக்குழுத் தலைவர் நடாவ் லபிட் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் நடாவ் லபிட் கூறிய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், இவ்வாறு பேசியதற்காக அவர் வெட்கப்படவேண்டும் என்றும் கடுமையாகச் சாடியுள்ளர்.

இந்து வலதுசாரி ஆதரவாளர்களும் நடாவ் லபிட் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் கடுமையாகப் பதிவிட்டுள்ளனர்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: