காணொளி: புயல் தாக்குதலால் பிலிப்பின்ஸ் கடற்கரையை பேரலைகள் தாக்கிய காட்சி

காணொளிக் குறிப்பு, பிலிப்பின்ஸ் : கடலில் எழுந்த ராட்சத அலைகள்
காணொளி: புயல் தாக்குதலால் பிலிப்பின்ஸ் கடற்கரையை பேரலைகள் தாக்கிய காட்சி

பிலிப்பின்ஸில் Fung-wong புயல் தாக்கியபோது, அந்நாட்டின் கடற்கரையை பேரலைகள் தாக்கின.

புயலுக்கு முன்பே சுமார் 14 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

Fung-wong புயலின்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இப்போது இந்த புயல் தென் சீனக் கடலைக் கடந்து தைவானை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு முன்பே பலவீனமடைந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு