காணொளி: இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய மாடு
காணொளி: இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய மாடு
மகாராஷ்டிராவின் கர்ஜாட் என்ற கிராமத்தில் மாடு ஒன்று சாலையில் உள்ள இருசக்கர வாகனத்தை ஆக்ரோஷமாக முட்டித் தள்ளியது. கர்ஜாட், தாஹிவாலி கிராமத்தை இணைக்கும் பாலம் அருகே மாடு ஒன்று சுற்றித் திரிந்தது.
மாடு தாக்கியதில் அர்ஜுன் மாசே என்பவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு குழுவினர் விரைந்து வந்து மாட்டை கட்டுப்படுத்தி, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



