பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கரின் சாதனைப் பயணம் - காணொளி

காணொளிக் குறிப்பு, பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்ற மனு பாக்கர் - காணொளி
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கரின் சாதனைப் பயணம் - காணொளி

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றதன் மூலம் 140 கோடி இந்தியர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.

மனு பாக்கர் 2020-ஆம் ஆண்டுக்கான பிபிசியின் 'வளரும் வீராங்கனை' விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை (ஜூலை 28) நடந்த தகுதிச்சுற்றுப் போட்டியில் மனு பாக்கர் 580 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து இன்றைய இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். இறுதிச்சுற்றில் அவர் மொத்தம் 221.7 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இந்தப் போட்டியில் தென் கொரிய வீராங்கனை ஓ யீ ஜின் 243.2 புள்ளிகள் சேர்த்து தங்கமும், மற்றொரு தென் கொரிய வீராங்கனை கிம் யெஜி 241.3 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம், ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.

மனு பாக்கர் ஒலிம்பிக் பதக்கம் வென்றதும், செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தை ராம் கிஷன் பாக்கர், "மனுவை நினைத்து நாடே பெருமிதம் கொள்கிறது. அவர் பங்கு பெற வேண்டிய நிகழ்வுகள் இன்னும் இரண்டு உள்ளன. அவற்றில் அவர் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

முழு விவரம் காணொளியில்...

மனு பாக்கர்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)