காணொளி: கறிவேப்பிலை சாகுபடியில் அசத்தும் ஆந்திர விவசாயிகளின் வெற்றிக் கதை
பாதுரி ஸ்ரீனிவாஸ் என்கிற விவசாயியின் குடும்பம் சுமார் 80 ஏக்கரில் கறிவேப்பிலை பயிரிடுகிறது. இவர்களே அதை ஏற்றுமதியும் செய்கிறார்கள். கறிவேப்பிலை விவசாயத்தில் வெற்றிகண்ட விவசாயிகளில் இவரும் ஒருவர்.
"நாங்கள் 1986 முதல் இந்த தொழிலில் இருக்கிறோம். 1986-ல் கறிவேப்பிலை பயிரிடத் தொடங்கினோம். அந்த நேரத்தில் விலை லாபகரமாக இல்லாதபோது, பம்பாயில் விற்றோம். எங்கள் ஏற்றுமதி அதனுடன் தொடங்கியது. அன்றிலிருந்து தொடர்ந்து சாகுபடி மற்றும் ஏற்றுமதி செய்து வருகிறோம். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகிறது. 80 ஏக்கரில் இதை பயிரிடுகிறோம்." எனத் தெரிவித்தார்
இவர் மட்டுமல்ல. ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பெதவட்லபுடியில் கறிவேப்பிலை சாகுபடியில் பெரும் லாபம் ஈட்டிய விவசாயிகள் பலர் உள்ளனர். அவர்களின் வெற்றிக் கதையைப் பற்றியதே இந்தக் காணொளி
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



