லண்டன் விமான நிலையத்தில் விமானங்கள் அருகே திடீரென ஓடிய நபரால் பரபரப்பு (காணொளி)
லண்டன் விமான நிலையத்தில் விமானங்கள் அருகே திடீரென ஓடிய நபரால் பரபரப்பு (காணொளி)
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டனின் ஹீத்ரோவில், டாக்ஸிவே எனப்படும் விமானங்களை ஓடுபாதைக்கு இழுத்து செல்லும் பாதையில் ஓடிய ஒரு நபரை விமான நிலைய ஊழியர்கள் துரத்திச் சென்றனர்.
விமானங்கள் தரையிறங்குவதை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் பிரிட்டன் யூடியூப் சேனலான பிக் ஜெட் டிவி இந்த காட்சிகளைப் பதிவு செய்தது.
இந்த சம்பவத்தால் விமானங்களில் எந்த தாமதமும் ஏற்படவில்லை என்றும், சம்பவம் விரைவாக சரிசெய்யப்பட்டதாகவும் ஹீத்ரோ விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



