காணொளி: டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிப்பு - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிப்பு - என்ன நடந்தது?
காணொளி: டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிப்பு - என்ன நடந்தது?

டெல்லி செங்கோட்டை அருகே இன்று ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டது. மெட்ரோ நிலையத்தின் 1ஆம் எண் கேட் அருகே காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தங்களுக்கு 6.55 மணி அளவில் அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை பிபிசியிடம் தெரிவித்தது.

வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன. 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்புத் துறை கூறுகிறது.

சிலர் காயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு