ஷெரீப் உஸ்மான் ஹாதி மறைவால் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை- யார் இவர்?

காணொளிக் குறிப்பு, ஷெரீப் உஸ்மான் ஹாதி மறைவால் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை- யார் இவர்?
ஷெரீப் உஸ்மான் ஹாதி மறைவால் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை- யார் இவர்?

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து அகற்றிய இளைஞர் இயக்கத்தின் ஒரு முக்கியத் தலைவரின் மறைவைத் தொடர்ந்து அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளது.

ஷெரீப் உஸ்மான் ஹாதி, கடந்த வாரம் டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து வெளியேறியபோது முகமூடி அணிந்த நபர்களால் சுடப்பட்டார். அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வங்கதேசத்தில் 2024-ஆம் ஆண்டு நடந்த போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக தேர்தல் நடத்தப்படும் தேதியை அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில், அதற்கு ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தத் தேர்தலில் ஹாதி ஒரு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.

வியாழக்கிழமை அவரது மரணம் குறித்த செய்தி வெளியானபோது, அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் வங்கதேச தலைநகரில் உள்ள ஒரு சதுக்கத்தில் போராடுவதற்காகத் திரண்டனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு