லாஸ் ஏஞ்சலிஸ்: புதிய காட்டுத்தீயால் மீண்டும் அச்சுறுத்தல், அணைக்கப் போராடும் அதிகாரிகள்
காட்டுத்தீயின் கோரப் பிடியில் இருந்து அமெரிக்கா மெல்ல விடுபட்ட நிலையில், தற்போது கடந்த சில நாட்களாகப் புதிய காட்டுத்தீ விபத்துகள் அச்சறுத்தி வருகின்றன.
லாஸ் ஏஞ்சலிஸின் வடக்கே சுமார் 72 கிமீ தொலைவில் ஏற்பட்ட ஹியூஸ் தீ, 10,000 ஏக்கருக்கும் அதிகமாக பரவியுள்ளது. கடந்த 22ஆம் தேதி ஏற்பட்ட இந்தத் தீ, சமீபத்திய தகவலின்படி 36 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீயை அணைக்க அதிகாரிகள் தற்போது போராடி வருகின்றனர்.
அதே போல கடந்த 23ஆம் தேதி, சான் டியேகோ பகுதியில் பார்டர் 2 காட்டுத்தீ ஏற்பட்டு 600 ஏக்கரில் எரிந்து வருகிறது.
அதிக காற்று வீசுவதால் லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் வென்ச்சுரா கவுண்டிகளின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை வரை சிவப்புக் கொடி எச்சரிக்கையை தேசிய வானிலை சேவை நீட்டித்துள்ளது.
எந்தவொரு தீயும் வேகமாகவும் கட்டுப்பாட்டை மீறியும் பரவக்கூடும். குறிப்பாக நீங்கள் அதிக தீ ஆபத்து உள்ள பகுதியில் இருந்தால், ஒரு தயார் திட்டத்துடன் இருங்கள் என அந்த மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



