காணொளி: அழிவிலிருந்து இந்த சீன குரங்குகள் தப்பித்தது எப்படி?
காணொளி: அழிவிலிருந்து இந்த சீன குரங்குகள் தப்பித்தது எப்படி?
சீனாவில் அழிவின் விளிம்புக்கு சென்ற கோல்டன்-ஸ்னப்-நோஸ்ட் (Golden snub-nosed) குரங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
மத்திய சீனாவின் அடர்ந்த காடுகளில் இந்த குரங்குகள் காணப்படுகின்றன.
1980கள் வரை ஷெனாங்க்ஜியா காடுகளில் குரங்குகள் அதன் தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் வேட்டையாடப்பட்டன.
இதனையடுத்து 500-க்கும் கீழ் இந்த குரங்குகளின் எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 1600-ஐ தாண்டியுள்ளது.
எண்ணிக்கை அதிகரிப்புக்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு கொண்டுவந்த திட்டமே காரணம் என கருதப்படுகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு