காணொளி: ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் என்ன ஆகும்?

காணொளிக் குறிப்பு, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் என்ன ஆகும்?
காணொளி: ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் என்ன ஆகும்?

ரஷ்யாவில் இருந்து எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ரஷ்ய எண்ணெயை வாங்குவதன் மூலம் யுக்ரேனின் நடந்துவரும் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என அமெரிக்கா கூறுகிறது.

ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்காக இந்தியா மீது டிரம்ப் 25 சதவீத வரியையும் விதித்துள்ளார்.

இந்நிலையில், வாஷிங்டனில் கடந்த புதனன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், "ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோதி தன்னிடம் உறுதியளித்ததார்" என குறிப்பிட்டார்.

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் என்ன ஆகும்? முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு