காணொளி: நாயை துரத்திய சிறுத்தை

காணொளிக் குறிப்பு, பல்கலைக்கழகத்தில் நாயை துரத்திய சிறுத்தை - சிசிடிவி
காணொளி: நாயை துரத்திய சிறுத்தை

திருப்பதி எஸ்வி பல்கலைக்கழகத்தில் நாய் ஒன்றை சிறுத்தை துரத்தும் காட்சி இது.

பல்கலைக்கழகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் சிறுத்தை நடமாடுவதை பாதுகாப்புப் பணியாளர்கள் கண்டறிந்தனர்.

அங்கிருந்த சிசிடிவி கேமராவில் சிறுத்தை ஒன்று நாயை துரத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனால், பல்கலைக்கழக மாணவர்கள் தனியாக வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு