காணொளி: நேருவின் வரிகளை மேற்கோள் காட்டி மம்தானி பேசியது என்ன?
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வென்றுள்ள ஜனநாயக கட்சியின் ஸோஹ்ரான் மம்தானி இந்திய முன்னாள் பிரதமர் நேருவை தனது உரையில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
அவர் தனது உரையில் கூறியதாவது. "உங்கள் முன் நிற்கும் இத்தருணத்தில் ஜவஹர்லால் நேருவின் வார்த்தைகளை நினைவுகூர்கிறேன். சில தருணங்கள் அரிதாகவே வரலாற்றில் இடம்பெறுகின்றன. பழையவற்றில் இருந்து புதிதான ஒன்றுக்கு நாம் அடியெடுத்து வைக்கும்போது, ஒரு யுகம் முடிவடையும் போது, நீண்ட காலமாக அடக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தின் ஆன்மா வெளிப்படும்போது அது நிகழ்கிறது."
"இன்றிரவு நியூயார்க் பழையதிலிருந்து புதிதான ஒன்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. அதனால் இந்த புதிய அத்தியாயம் யாருக்கு என்ன கொடுக்கும் என்பதைப் பற்றி யாரும் தவறாகப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தெளிவுடனும், உறுதியுடனும் பேசுவோம். சாக்குப் போக்குகள் சொல்வதை விட, நாம் என்ன சாதிப்போம் என்பது பற்றிய துணிச்சலான பார்வையை மக்கள் தங்கள் தலைவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் அத்தியாயமாக இது இருக்கும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



