உத்தரகாண்டில் நிலச்சரிவு - 9 தொழிலாளர்களின் நிலை என்ன?
உத்தரகாண்டில் நிலச்சரிவு - 9 தொழிலாளர்களின் நிலை என்ன?
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
சிலாய் பந்த் அருகே கூடாரமிட்டிருந்த 19 தொழிலாளர்களில் 9 பேர் நிலச்சரிவால் காணாமல் போனதாகவும் 10 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட மழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதாக உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



