இலங்கையில் திட்வா புயல் ஏற்படுத்திய பாதிப்பை காட்டும் 10 படங்கள்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆகவும் காணாமல் போனோர் எண்ணிக்கை 191 ஆகவும் அதிகரித்துள்ளது. 2,17,263 குடும்பங்களை சேர்ந்த 7,74,724 பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த உயிரிழப்புகளுள் 52 பேர் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக, இலங்கை முழுவதும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெளிப்படுத்தும் படங்கள் சில...

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொழும்பு நகரத்தின் புறநகர்ப் பகுதியான கடுவலையில் சூழ்ந்துள்ள வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடுவலையில் மழை வெள்ளத்தில் பகுதியளவு மூழ்கியுள்ள வீடுகளை காட்டும் கழுகுப்பார்வை படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடுவலை பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொழும்பு புறநகர் பகுதியான வெல்லம்பிட்டியில் வெள்ளநீரில் முதியவர் ஒருவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொழும்புவில் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெள்ள நீர் புகுந்துள்ள தன் வீட்டில் நிற்கும் ஒருவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெல்லம்பிட்டி பகுதியில் பாதிக்கப்பட்ட வீட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஒருவர் உதவுகிறார்

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு