காணொளி: பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை
காணொளி: பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை
தீபா மாலிக்...
இந்திய விளையாட்டு உலகின் போக்கை மாற்றிய ஒரு பெயர்.
29 வயதில் முதுகுத் தண்டில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, மார்புக்கு கீழ் பகுதி முழுவதும் செயலிழந்த நிலையில் இருந்தபோதும், அவர் விளையாட்டிலிருந்து விலகவில்லை — மாறாக, விளையாட்டையே அவர் புதிதாக வரையறுத்தார்.
பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். அதற்குப் பிறகும், இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல விருதுகள், சாதனைகளை அவர் தொடர்ந்து குவித்தார்.
இப்போது, பல்வேறு பொறுப்புகளில் இருந்து வரும் அவர் , பல பிரசாரங்கள் மற்றும் விழிப்புணர்வுகளை முன்னெடுத்து , இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.
அவருடனான உரையாடல் இதோ:
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு