நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் - சுவாரசிய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, நூறு ஆண்டுகளுக்கு பிறகு பாரிஸில் ஒலிம்பிக்... சுவாரசிய தகவல்கள்
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் - சுவாரசிய தகவல்கள்

நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஃப்ரான்ஸ் நாட்டில் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. லட்ச கணக்கான பார்வையாளர்கள் இந்த போட்டிகளை காண பாரிஸ் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இங்கே நடைபெறுகின்றன. இதில் சுமார் 15,000 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். 206 நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளிலும், 184 நாடுகள் பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்கின்றன.

1.3 கோடி டிக்கெட்டுகள் ரசிகர்களுக்காக விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும் 300 கோடி மக்கள் இந்த போட்டிகளை இணையத்திலும் டிவியிலும் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)