நெட்பிளிக்ஸில் சாதனை படைத்த கொரிய படம்-அப்படி என்ன இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, நெட்பிளிக்ஸில் சாதனை படைத்த தென்கொரிய படம்
நெட்பிளிக்ஸில் சாதனை படைத்த கொரிய படம்-அப்படி என்ன இருக்கிறது?

கே-பாப் டெமன் ஹண்டர்ஸ் (K-pop Demon Hunters) எனும் படம் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எனும் சாதனையை படைத்துள்ளது.

படம் வெளியாகி முதல் இரண்டு மாதங்களில், அனிமேட்டட் மியூசிக்கல் படமான இது, 23.6 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.

Huntr/x எனப்படும் கற்பனையான கேபாப் பெண்கள் இசைக்குழு செய்யும் சாகசங்கள் குறித்து இப்படம் பேசுகிறது. இந்த குழுவினர் தங்களது இசை மற்றும் சண்டை போடும் திறனை பயன்படுத்தி பேய்களிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றுகின்றனர்.

இந்த படத்தின் கண்ணைக்கவரும் அனிமேஷனுக்காகவும் பாரம்பரிய மற்றும் நவீன கொரிய கலாசாரத்தை காண்பித்ததற்காகவும் பலர் இப்படத்தை பாராட்டியுள்ளனர்.

"இப்படத்தில் கொரிய கலாசாரம் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளன. கொரிய வரலாறு, இசை, உடை, உணவு, மொழி என எங்களது இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொரிய கலாசாரத்தை படத்தில் காண்பிப்பதில் உறுதியாக இருந்தனர். அது படத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது." என பின்னணி குரல் கலைஞர் ஆர்டென் சோ கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு