காணொளி: 'அவசர அவசரமாக ஏன்?' - ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி
காணொளி: 'அவசர அவசரமாக ஏன்?' - ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் தவெக தலைவர் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக விஜய் பேசியிருக்கிறார்.
அப்போது பேசிய விஜய் தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக ஒருநபர் ஆணையம் அமைத்ததாகத் தெரிவித்தார். அதோடு அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் தவெக மீது அவதூறு பரப்புவதற்காக அவசர அவசரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியதாகவும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



