தெருநாய்கள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, தெருநாய்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?
தெருநாய்கள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?

தெருநாய்கள் தொடர்பான வழக்கில் நவம்பர் 7ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது.

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

அகற்றப்பட்ட பிறகு, அவற்றுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்பகங்களில் வைக்க வேண்டும்.

மேலும், நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகள், கால்நடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தெருநாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மக்கள் எப்படி பார்க்கின்றனர்? சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள மக்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த கருத்துகள் இவை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு