காணொளி: டிரம்ப் முடிவை வரவேற்கும் பாகிஸ்தான், இஸ்ரேலை அங்கீகரிக்குமா?
காஸாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் 20 அம்ச திட்டத்தை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த இரு நாடுகள் தீர்வு திட்டத்தை செயல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.
அதேநேரத்தில் பாகிஸ்தான் இஸ்ரேலை அங்கீகரிக்குமா என்ற கேள்வியையும் இந்த வரவேற்பு எழுப்பியுள்ளதும்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், ராணுவத் தளபதி அசிம் முனீரும் காசா திட்டத்தை தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருவதாக டிரம்ப் கூறினார். அதே போல இதை வரவேற்று ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவும் இட்டிருந்தார்.
பேரழிவுக்கு மத்தியில் உள்ள காஸாவில் அமைதிக்கான நம்பிக்கையை இந்த அறிவிப்பு எழுப்பியுள்ள நிலையில், பாலத்தீனம் குறித்த பாகிஸ்தானின் இரு நாடுகள் தீர்வு என்ற கொள்கை முடிவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.
தற்போதைய சூழலில் பாகிஸ்தான் இஸ்ரேலை அங்கீகரிக்குமா? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



