காணொளி: SCO நாடுகள் தொடங்கும் புதிய வங்கி யாருக்கான 'செக்'?

காணொளிக் குறிப்பு, திடீரென SCO வங்கி தொடங்க காரணம் என்ன?
காணொளி: SCO நாடுகள் தொடங்கும் புதிய வங்கி யாருக்கான 'செக்'?

அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டிற்காக தலைவர்கள் சீனாவில் சந்தித்தபோது புதிய வளர்ச்சி வங்கி தொடங்குவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டது. சீனா நீண்ட காலமாக இதை வலியுறுத்தி வருகிறது.

எஸ்சிஓவின் இந்த வளர்ச்சி வங்கிக்கான சாத்தியங்களை சீன ஊடகங்கள் புகழ்ந்துள்ளன. இந்த வங்கி இயற்கை வளம் மிக்க எஸ்சிஓ உறுப்புநாடுகளில் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த வங்கி சீனாவுக்கும் மத்திய ஆசியாவுக்குமான பொருளாதார இணைப்பை வலுப்படுத்தி, ஆசியா மற்றும் ஐரோப்பாவை உள்ளடக்கிய பகுதியான யூரேசியாவில் சீனாவின் பட்டுப்பாதை இருப்பை வலுப்படுத்தும்.

எஸ்சிஓ வங்கி என்றால் என்ன? அது என்ன செய்யும்?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு