18 அடி நீள ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் அதிகாரி

காணொளிக் குறிப்பு, ராஜநாகத்தை லாவகமாக பிடித்த அதிகாரி
18 அடி நீள ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் அதிகாரி

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே மலையோர பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய சுமார் 18 அடி நீளம் கொண்ட ராஜநாக பாம்மை வனத்துறை அதிகாரி லாவகமாக பிடித்தார்.

விதுரா மலையோர பகுதியில் உள்ள அஞ்சுபெருந்தோடு நீரோடையில் குளிக்க சென்ற பொதுமக்கள் அந்த பகுதியில் சுமார் 18-அடி நீள பெரிய ராஜ நாக பாம்பு இருப்பதைக் கண்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை பெண் அதிகாரி ரோஷினி ராஜ நாகத்தை பிடித்தார். பின்னர் பாம்பை வனத்துறையினர் காப்பு காட்டில் விடுவதற்காக எடுத்து சென்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு