இந்தியா மீது 10% வரியா? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்
இந்தியா உட்பட பிரிக்ஸ் நாடுகள் மீது 10% கூடுதல் வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக, நேற்று (ஜூலை 08) செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம், "இந்தியாவை பற்றி பேசியிருந்தீர்கள், ஆனால் சில நாட்களுக்கு முன் பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க எதிர்ப்பு கொள்கையுடன் இருந்தால் புதிய வரி விதிக்கப்படும் என அறிவித்தீர்கள். இந்தியா, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்." என கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த டிரம்ப், "அவர்கள் பிரிக்ஸ் உறுப்பினராக இருந்தால் 10% வரி செலுத்த வேண்டியிருக்கும். பிரிக்ஸ் எங்களை காயப்படுத்தவே அமைக்கப்பட்டது. பிரிக்ஸ் டாலரின் மதிப்பை குறைக்க அமைக்கப்பட்டது. டாலரை உலக நாணய அந்தஸ்தில் இருந்து அகற்ற விரும்புகிறது. அவர்கள் விரும்பினால் அந்த விளையாட்டை ஆடலாம். என்னாலும் அதனை விளையாட முடியும். பிரிக்ஸ் நாடுகள் அனைத்துக்கும் 10% வரி விதிக்கப்படும்." என பதிலளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



