காணொளி: "இரான் இன்னும் கடுமையான தாக்குதல்களை சந்திக்கும்" - ரூபியோ

காணொளிக் குறிப்பு, "இரான் இன்னும் கடுமையான தாக்குதல்களை சந்திக்கும்" - ரூபியோ
காணொளி: "இரான் இன்னும் கடுமையான தாக்குதல்களை சந்திக்கும்" - ரூபியோ

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையே மோதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்தச் சூழலில் இரான் மீது இன்னும் கடுமையான தாக்குதல்கள் அமெரிக்க ராணுவத்திடமிருந்து வர உள்ளன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

"அடுத்தக்கட்ட தாக்குதல் இப்போதுள்ளதை விட இன்னும் அதிக கடுமையானதாக இருக்கும். ஒருவர் சத்தமாக கேட்கிறார், "இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்?" என. எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியாது. எங்களுக்கு இலக்குகள் உள்ளன. எவ்வளவு காலமானாலும் இதனை செய்து முடிப்போம்." என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு