மின்சாரம் தாக்கி மயங்கிய குரங்கு - உயிரை காப்பாற்றிய வனத்துறை அதிகாரி
மின்சாரம் தாக்கி மயங்கிய குரங்கு - உயிரை காப்பாற்றிய வனத்துறை அதிகாரி
கேரளாவில் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்த குரங்கு குட்டியை, வனத்துறை அதிகாரி ஒருவர் காப்பாற்றினார்.
திருவனந்தபுரத்தில் உள்ள கோல்டன் வேலி சோதனைச் சாவடி அருகே குரங்குகள் இடையேயான சண்டையின் போது குரங்கு குட்டி ஒன்று தற்செயலாக மின் கம்பியில் பட்டு மயங்கி கீழே விழுந்தது.
அசைவின்றி கிடந்த குரங்குக்கு அங்கு பணியில் இருந்த, வனத்துறை அதிகாரி அருண் சி.பி.ஆர் செய்தார்.
சில நிமிடத்தில் சுயநினைவுக்கு வந்த குரங்கு உடனடியாக அதன் தாயுடன் மீண்டும் இணைந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



