ஈலோன் மஸ்கின் புதிய கட்சியால் கவலையா? டிரம்ப் பதில்

காணொளிக் குறிப்பு, 'மஸ்க்கின் புதிய கட்சி எங்களுக்கு உதவியாக இருக்கும்' - டிரம்ப்
ஈலோன் மஸ்கின் புதிய கட்சியால் கவலையா? டிரம்ப் பதில்

மஸ்க் புதிய கட்சி தொடங்குவது தங்களுக்கு உதவியாக இருக்கும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

புதிய கட்சி குறித்து சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வந்த மஸ்க், சமீபத்தில் புதிய கட்சியை தொடங்குவதாக எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார். அதற்கு 'அமெரிக்கா கட்சி' என பெயரிட்டுள்ளார்.

டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து மஸ்க் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

டிரம்ப் தொடர்ச்சியாக மஸ்கின் திட்டங்களை விமர்சித்து வந்த நிலையில், புதிய அரசியல் கட்சி குறித்த யோசனையை மஸ்க் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், ஜூலை 8 அன்று கேபினட் கூட்டம் முடிந்த பிறகு,"சிறப்பு அரசு ஊழியர் பதவியில் இருந்து ஈலோன் மஸ்க் வெளியேறிய பிறகு நடக்கும் முதல் கேபினட் கூட்டம் இது. அவர் இப்போது மூன்றாவது அரசியல் கட்சியை உருவாக்கப் போவதாக கூறுகிறார். இது கவலையளிக்கிறதா?" என டிரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு, "இல்லை, அது எங்களுக்கு உதவும். மூன்றாம் தரப்பு இருப்பது எப்போதும் எனக்கு நல்லதுதான். குடியரசுக் கட்சியினரைப் பற்றி எனக்குத் தெரியாது." டிரம்ப் பதிலளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு