பாலத்தில் மோதி பெயர்ந்து விழுந்த 'டபுள் டெக்கர்' பேருந்து மேற்கூரை - காணொளி

காணொளிக் குறிப்பு, பாலத்தில் மோதிய 'டபுள் டெக்கர்' பேருந்து - பெயர்ந்து விழுந்த மேற்கூரை
பாலத்தில் மோதி பெயர்ந்து விழுந்த 'டபுள் டெக்கர்' பேருந்து மேற்கூரை - காணொளி

பிரிட்டனின் மான்செஸ்டரில் பாலத்தை கடந்த போது டபுள் டெக்கர் பேருந்து மேற்கூரை பெயர்ந்து விபத்துக்குள்ளான காட்சி இது.

இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

இதில் 19 வயது மதிக்கத்தக்கப் பெண் உட்பட மூவர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

50 வயதான பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சால்ஃபோர்ட் (Salford) நகர சபையுடன் பிரிட்ஜ்வாட்டர் (Bridgewater) கால்வாய் குழு இணைந்து விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகிறது.

2023-ஆம் ஆண்டும் இந்த பாலத்தில் இதேபோல ஒரு விபத்து நடந்ததுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு