மலைவாழ் கர்ப்பிணி பெண்களுக்காக உருவாக்கப்பட்ட "சேவ் மாம்" செயலி

காணொளிக் குறிப்பு, மலைவாழ் கர்ப்பிணிகளுக்காக உருவாக்கப்பட்ட "சேவ் மாம்" செயலி

மலைவாழ் பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக செயலியை உருவாக்கியுள்ளார் மதுரையைச் சேர்ந்த தினேஷ் மற்றும் செந்தில்.

தமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் நீண்டுள்ளது பசுமை கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர். இந்த மலைத்தொடரின் கிராமங்களில் வசிக்கும், கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான சவால், மருத்துவ பரிசோதனைகளுக்காக மலை கிராமங்களில் இருந்து கீழே மருத்துவமனைகளுக்கு வருவதுதான்.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக மதுரையைச் சேர்ந்த தினேஷ் மற்றும் செந்தில் இருவரும் இணைந்து ஒரு செயலியைக் கண்டுபிடித்தனர். ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, சர்க்கரை அளவு உள்ளிட்ட 10 விதமான அளவீடுகளைக் கண்காணிக்கும் வகையிலான அந்த செயலிக்கு "Save Mom" என்று பெயரிடப்பட்டது.

தயாரிப்பு: பிரசன்னா வெங்கடேஷ்படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: