மதுரை, சென்னையில் வருமான வரி சோதனை- ரூ.150 கோடி, ரூ. 14 கோடி தங்கம் சிக்கின

மதுரை மற்றும் சென்னை நடந்த வருமான வரி சோதனையில், ரூ. 14 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரூ.150 கோடி ரொக்கம், பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா?

  2. அடுத்த 15-20 நாள்களுக்கு மாணவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும்: ஏன்?

  3. குரங்கம்மைக்கும் உடலுறவுக்கும் என்ன தொடர்பு? உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?

  4. செஸ் ஒலிம்பியாட்: "தமிழ்நாட்டிற்கு சதுரங்கத்துடன் வலுவான கலாசார தொடர்பு உள்ளது" - நரேந்திர மோதி

  5. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

    இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

    • சர்வதேச சதுரங்கப் போட்டியான செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் முதல் முறையாக நடக்கிறது. இந்தியாவின் செஸ் 'தலைமையகமான' தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் இந்தப் போட்டி இன்று தொடங்கியது.
    • உலகின் முன்னோடி சுற்றுச்சூழல் விஞ்ஞானியான ஜேம்ஸ் லவ்லாக் தனது 103 வது பிறந்தநாளில் பிரிட்டனில் இறந்தார்.
    • 72 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி பிரிட்டனில் இன்று தொடக்கம்.
    • கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் 12 மணி நேர விசாரணை
    • இந்திய நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து இதுவரை 27 எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    • மதுரை மற்றும் சென்னை நடந்த வருமான வரி சோதனையில், ரூ. 14 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரூ.150 கோடி ரொக்கம், பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள். நன்றி.

  6. மதுரை, சென்னையில் வருமானவரி சோதனை- ரூ.150 கோடி, ரூ.14 கோடி தங்கம் சிக்கின

    மதுரை, சென்னை

    மதுரை மற்றும் சென்னை மாவட்டங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள், பிரபல தொழிலதிபர்கள் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகளில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனையில், ரூ. 14 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரூ.150 கோடி ரொக்கம், பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை, மதுரை மற்றும் திண்டுக்கல் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் கடந்த 20ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலி ரசீதுகளைப் பயன்படுத்தியிருப்பதும், அதன் மூலம் பெருமளவில் வருமானத்தை மறைத்து காட்டியிருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.

    இந்த நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதில் மதுரையில் அண்ணாநகர், அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜெயபாரத், கிளாட்வே உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் குழுவாக இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.150 கோடி பணம், ரூ. 14 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம்,பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

  7. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா - நேரலை

    மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின் நேரலை காட்சிகள்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  8. திரெளபதி முர்மூவை 'ராஷ்ட்ரபத்னி' என்று அழைத்த காங்கிரஸ் எம்.பி - மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் பாஜக

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, செஸ் ஒலிம்பியாட் - பன்னாட்டு கொடிகளின் அணிவகுப்பு

    செஸ் ஒலிம்பியாட் தொடரில், பங்கேற்கும் நாடுகளில் அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட அளவில் செஸ் விளையாட்டில் வெற்றிப் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள், பன்னாட்டு கொடிகளை ஏந்தி வீரர்களை வழிநடத்தி சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

    இந்த தொடரை பிரதமர் நரேந்திர மோதி 6மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. சுல்தான் கான்: பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சதுரங்க சாம்பியனான இந்திய பணியாள்

  11. அடிபட்டு இறந்த தாய் தேவாங்கு; குட்டி பிழைத்தது எப்படி? வீடியோ காட்சி

  12. செஸ் ஒலிம்பியாட்: அதிக எண்ணிக்கையிலான அணிகள் பங்கேற்பு - வேறு என்னென்ன சிறப்புகள்?

  13. கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் 12 மணி நேர விசாரணை

    கள்ளக்குறிச்சி பள்ளி

    கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு நள்ளிரவு சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள். கள்ளக்குறிச்சி தனியார் மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர், செயலாளர் உட்பட 5 பேரிடம் சிபி சிஐடி போலீசார் 12 மணி நேரத்திற்குள் விசாரணையை முடித்துகொண்டு விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி வீட்டில் ஆஜர் படுத்தி மீண்டும் சேலம் சிறையிலடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் இருந்த பள்ளியின் தாளாளர், செயலாளர் உட்பட 5 பேரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். இதனை ஏற்று ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி அனுமதித்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கணியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணித்தது தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

    இதனிடையே இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு மாணவி மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் சிபி சிஐடி போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனு மீதான விசாரணை நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சேலம் மத்திய சிறையிலிருந்த ஐந்து பேர் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

    இதையடுத்து கைது செய்யபட்ட 5 பேரையும் நேற்று பிற்பகல் 12.30 மணி முதல் இன்று பிற்பகல் 12.30 மணி வரை ஒரு நாள் சிபி சிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கினார் நீதிபதி.

    அதன் பேரில் சிபி சிஐடி போலீசார் 5 பேரிடமும் விழுப்புரம் சிபி சிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையை சுமார் 12 மணி நேரத்திற்குள் முடித்துக் கொண்டனர். இதன் பிறகு நேற்று(புதன்கிழமை) நள்ளிரவில் விழுப்புரத்திலுள்ள நீதிபதி புஷ்பராணி வீட்டில் 5 பேரையும் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

  14. "நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன" - கொடிசியா தொழிற்பூங்காவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

    கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பாக கொடிசியா இயங்கி வருகிறது. இந்த அமைப்புக்குச் சொந்தமான பல வர்த்தக வளாகங்கள் கோவையில் உள்ளன. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம் கிராமத்தில் 140 ஏக்கரில் கொடிசியா வர்த்தக அமைப்பின் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக நீர் நிலைகளை ஆக்கிரமித்து தவறான தகவல்களை வழங்கி கொடிசியா அமைப்பு டிடிசிபி அனுமதி பெறப்பட்டதாக அந்த ஊரைச் சேர்ந்த விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில் கொடிசியா அமைப்பு செய்துள்ள விதிமீறல்களை விசாரித்து நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் இன்று கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தீர்வு காணப்படவில்லையென்றால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

  15. குஜராத்தில் கள்ளச்சாராயத்திற்கு 42 பேர் பலியானது எப்படி? பிபிசி கள ஆய்வு

  16. நாடாளுமன்றத்தில் இருந்து இதுவரை 27 எம்.பி.க்கள் இடைநீக்கம்

    நாடாளுமன்றம்

    பட மூலாதாரம், Getty Images

    இந்திய நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து இதுவரை 27 எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு எம்.பி.க்கள் இதில் அடக்கம்.

    இன்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சுஷில் குமார் குப்தா, சத்தீப் குமார் பாதக், சுயேச்சை எம்.எல்.ஏ. அஜித் குமார் புயன் ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து இந்த வாரம் முழுவதற்கும் நீக்கப்பட்டுள்ளனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விதித்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டத் தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்தம் 27 எம்.பி.க்களில் 23 பேர் மாநிலங்களவையை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 4 பேர் மக்களவையை சேர்ந்தவர்கள்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  17. செஸ் ஒலிம்பியாட்: தென்னிந்தியா சதுரங்கத்தில் முன்னோடியாகத் திகழ்வது ஏன்?

  18. பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு

  19. விஞ்ஞானி ஜேம்ஸ் லவ்லாக் 103 வயதில் மறைவு: பருவநிலை மாற்றத்தை கணித்த முன்னோடி

    லவ்லாக்

    பட மூலாதாரம், PA Media

    படக்குறிப்பு, லவ்லாக்

    பருவநிலை மாற்றத்தை 1960களிலேயே முன் கணித்தவரான முன்னோடி சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஜேம்ஸ் லவ்லாக் பிரிட்டனில் தனது 103வது பிறந்த நாளில் உயிரிழந்தார்.உயிருள்ள, உயிரற்ற பொருள்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த, தம்மைத்தாமே ஒழுங்குபடுத்திக் கொள்ளும் அமைப்பாக புவி செயல்படுகிறது என்று கூறும் கயா கோட்பாடு அவரால் உருவாக்கப்பட்டது. இந்தக் கோட்பாடு 1960களில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    ஆனால், அணு ஆற்றல், எரிவாயுவை எடுப்பதற்கான பாறை உடைப்பு முறை ஆகியவற்றுக்கு அவர் அளித்த ஆதரவு பிற சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டது. நாசாவில் பணியாற்றிக் கொண்டிருந்த லவ்லாக், உயிரினங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டு யுரேகா இயக்கம் என்ற ஒன்றைத் தொடங்கினார்.

    வேதிப் பொருள்களால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதையும் அவர் வெளிப்படுத்தினார்.

  20. செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் தொடக்கம்

    உலக சதுரங்கப் போட்டியான செஸ் ஒலிம்பியாட் முதல் முறையாக இந்தியாவில் நடக்கிறது. இந்தியாவின் செஸ் தலைமையகமாக கருதப்படும் சென்னைக்கருகே, மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டியின் தொடக்கவிழா இன்று நடக்கிறது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    ஒலிம்பியாட் சுடர் இந்தியாவில் 20 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்குப் பயணித்து நாட்டில் உள்ள 75 முக்கிய இடங்களுக்குப் பயணித்து மாமல்லபுரம் வந்தடைந்தது. அங்கிருந்து சுவிட்சர்லாந்தில் உள்ள உலக செஸ் கூட்டமைப்பான ஃபிடே அலுவலகத்துக்கு சென்றது.