கொரோனா வைரஸ்: 'கேரளாவில் இறப்பு விகிதம் 0.5% மட்டுமே' - சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சர்வதேச, இந்திய மற்றும் தமிழகம் தொடர்பான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். வெறும் செய்தியாக மட்டும் அல்லாமல், கொரோனாவின் பொருளாதார தாக்கம், கொரோனா வராமல் தற்காத்துக் கொள்ளும் முறை என அனைத்தையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. கேரளாவில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் விகிதம் 0.5% மட்டுமே என்று அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

    "உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் விகிதம் 5% ஆக உள்ளது. சில நாடுகளில் 10% உள்ளது. முறையான தடுப்பு நடவடிக்கை மூலம் இதை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். இங்கு குணமடையும் விகிதமும் அதிகமாக உள்ளது," என்று அமைச்சர்ஷைலஜா கூறியுள்ளார்.

    ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகளின்படி உலகெங்கும் கோவிட்-19 தொற்றின் காரணமாக நிகழும் இறப்புகளின் விகிதம் 6.9% ஆக உள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. வேலையிழந்த அமெரிக்கர்கள்

    கொரோனா தொற்றால் கடந்த நான்கு வாரங்களில் 21மில்லியனிற்கும் அதிகமான அமெரிக்கர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

    இந்த மாதம் வேலையில்லா விகிதம் 20 சதவீத அளவு வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் பெரும்பாலான இடங்களில் முடக்கநிலை உள்ளது. இதனால் பல வர்த்தகங்கள் தடைப்பட்டுள்ளன.

    அமெரிக்காவில் இதுவரை ஆறு லட்சத்து 40 ஆயிரம் பேர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 ஆயிரத்து 985 பேர் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

  4. கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் தேர்தல் வெற்றி

    தென் கொரியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மூன் ஜே இன் மீண்டும் அபார வெற்றி பெற்றுள்ளார்.

    கொரோனா வைரஸ் பிரச்சனையை அரசாங்கம் எதிர்கொண்ட விதத்தை மக்கள் பாராட்டும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

    கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று தொடங்கிய பிறகு தேசியத் தேர்தல் நடந்த சில நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. தேர்தல் வாக்குப் பதிவின்போது கடுமையான பாதுகாப்பு மற்றும், சமூக விலகல் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

    கிட்டத்தட்ட எல்லா வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், மூன் ஜே இன்னின் ஜனநாயக கட்சிக்கு தேசிய சட்டமன்றத்தில் உள்ள 300 இடங்களில் 163 இடங்கள் கிடைத்துள்ளன.

    அந்தக் கட்சியின் சகோதரக் கட்சியான பிளாட்ஃபார்ம் கட்சிக்கு 17 இடங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஆளும் தரப்புக்கு 180 இடங்கள் கிடைத்துள்ளன.

    தென் கொரிய தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

  5. இந்தியாவில் ஒரு நாளில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய முடியும்?

    இந்தியா முழுவதும் இதுவரை 2,90,401 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டுள்ளது என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய மருத்துவர் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார்.

    அவற்றில் 30,043 பரிசோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நாளுக்கு 40,000 பேருக்கு பரிசோதனை செய்யும் அளவுக்கு இந்தியா முழுவதும் உள்ள ஆய்வகங்களில் வசதிகள் உள்ளன என்று கங்காகேத்கர் கூறியுள்ளார்.

    இந்தியாவில் குறைவானவர்களுக்கே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள விமர்சனம் குறித்து அந்த செய்தியாளர் சந்திப்பில் அப்போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்காகேத்கர், "ஒருவருக்கு தொற்று இருப்பதைக் கண்டறிய ஜப்பானில் சராசரியாக 11.7 பேருக்கும், இத்தாலியில் சராசரியாக 6.7 பேருக்கும், அமெரிக்காவில் சராசரியாக 5.3 பேருக்கும், பிரிட்டனில் சராசரியாக 3.4 பேருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 24 பேருக்கு பரிசோதனை செய்ய்யப்படுகிறது," என்றார்.

  6. கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்

    இருமல் மற்றும் தும்மலின்போது மூக்கு மற்றும் வாய் வழியாக, மிகச்சிறிய, சுமார் 3,000 எண்ணிக்கை அளவிலான உமிழ்நீர்த் துளிகள் வெளிவரும்.

    இந்தத் துளிகளின் அளவு 1-5 மைக்ரோ மீட்டர் மட்டுமே. அதாவது மனிதர்களின் சராசரி மயிரிழை ஒன்றின் அகலத்தில் 30இல் ஒரு பங்கு.

    ஆடைகள், பொருட்கள் மீது மட்டும் படியாமல் காற்றிலும் கலக்கும் இந்தத் துகள்கள், காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்.

    ஒரு துளியில் எத்தனை வைரஸ்கள் இருக்கும் என்பது குறித்த சரியான தரவுகள் இல்லை.

    இன்ஃபுளூயென்சா வைரஸ்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவரின் தும்மலில் வெளியாகும் ஒரு சிறு துளியில் பல பத்தாயிரம் வைரஸ் கிருமிகள் இருப்பது தெரிந்தது.

    இந்த அளவு ஒவ்வொரு வகை வைரஸுக்கும் வேறுபடலாம்.இதுகுறித்து மேலும் விரிவாக தெரிந்து கொள்ள

    corona awareness

    பட மூலாதாரம், Getty Images

  7. ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கிறதா பிரிட்டன்?

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிரிட்டனில் மேலும் மூன்று வார காலம் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஊரடங்கில் மாற்றம் கொண்டுவர இது சரியான நேரமல்ல என்று அரசாங்கம் கருதுவதாக நம்புகிறார் அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்காக்.

    கொரோனா தொற்று குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும் பேராசிரியர் நீல் ஃபெர்குசன் கூறுகையில், "கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை சமூக விலகல் கட்டுப்பாடுகள் குறிப்பிட்ட அளவில் கடைபிடிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

    ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கிறதா பிரிட்டன்?

    பட மூலாதாரம், Getty Images

  8. அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலியாவில் என்ன நிலை? - காணொளி தொகுப்பு

    அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2600 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது அமெரிக்காவில் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிலும், இதுவரை ஒரே நாளில் ஏற்பட்ட மிகவும் அதிகபட்ச உயிரிழப்பாகும். பிற நாடுகளின் நிலவரம் என்ன?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, சீனா, தென் கொரியாவிடம் இருந்து பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்யவுள்ள இந்தியா

    சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து கொரோனா பரிசோதனை கருவிகளை இந்தியா கொள்முதல் செய்ய உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிடிஜ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    அதேபோல ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் இருந்து மருத்துவ உபகரணங்களை இந்தியா கொள்முதல் செய்ய யோசித்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  10. இரானில் ஒரே நாளில் 1600 பேருக்கு கொரோனா பாதிப்பு

    இரானில் ஒரே நாளில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கினஷ் ஜஹான்புர் தெரிவித்தார்.

    இதனால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 78,000ஆக உயர்ந்துள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடான இரானில் நேற்று ஒரே நாளில் 92 பேர் உயிரிழக்க, அங்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 4,869ஆக உயர்ந்துள்ளது.

    ஆனால், அதிகாரப்பூர்வ தரவுகளைவிட அங்கு அதிகம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

    இரானில் ஒரே நாளில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா தொற்று

    பட மூலாதாரம், Getty Images

  11. இறந்தவர்களின் உடலை புதைக்க கூடாதா?

    கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடலை புதைக்க கூடாதா? விதிமுறைகள் என்ன?

  12. "கொரோனா பணக்காரர்களுக்கு வரும் நோய்" - தமிழக முதல்வர் பழனிசாமி

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

    அதன் சில முக்கிய அம்சங்கள்:

    • கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படுமா எனக் கேட்டபோது, "இது பணக்காரர்களுக்கு வந்த நோய். ஏழைகளுக்கு எங்கே இந்த நோய் வந்தது? இது வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்து வந்து இறக்கப்பட்ட நோய். ஏழைகளைப் பார்த்தால் பயமாக இல்லை. பணக்காரர்களைப் பார்த்தால்தான் பயமாக இருக்கிறது. இவர்கள் வெளிநாடுகளுக்குப் போய்வந்து நோயை இறக்குமதி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த நோய் உருவாகவில்லை" என்று தெரிவித்தார்.
    • தமிழ்நாட்டில் இதுவரை 13 மருத்துவப் பணியாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் அரசு மருத்துவர்கள். 5 பேர் தனியார் மருத்துவர்கள். ஒரு சுகாதாரப் பணியாளருக்கும் ஒரு தூய்மைப் பணியாளருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.
    • காய்கறிகளின் விலை கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் விலை குறைந்திருக்கிறது.
    • எதிர்க்கட்சித் தலைவர் சொல்லும் விமர்சனங்கள் குறித்துக் கேட்டபோது, குறைசொல்வதெற்கென்றே இருக்கக்கூடிய கட்சி தி.மு.க. எனக் குறிப்பிட்டார்.
  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் பாதிக்கப்பட்டோாரின் எண்ணிக்கை 12,000-ஐ கடந்தது

    இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12000-ஐ கடந்துள்ளது.

    இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட தகவலின்படி இதுவரை 12380 பேர் இதுவரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் கோவிட்-19 தொற்று காரணமாக இந்தியா முழுவதும் இறந்துள்ளனர்

    இந்நிலையில் இத்தொற்றால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414ஆக இருக்கிறது. 1514 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10824 ஆக உள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3.3% பேர் இறந்துள்ளனர். 12.02% பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்

  14. "மனதார மன்னிப்பு கோருகிறோம்" - இத்தாலியிடம் மன்னிப்பு கேட்ட ஐரோப்பிய ஆணையம்

    கொரோனா தொற்றின் ஆரம்பகட்டத்தில் உதவி செய்யாமல் போனதற்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் இத்தாலியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    "ஆம். யாருமே இதற்கு தயாராக இருக்கவில்லை. ஆரம்பகட்டத்தில் இத்தாலி கொரோனா தொற்றின் பிடியில் இருந்தபோது பலரும் அந்நாட்டுடன் துணை நிற்கவில்லை என்பதும் உண்மை. அதற்காக இத்தாலியிடம் ஐரோப்பா மன்னிப்பு கேட்கிறது" என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அர்சலா வான் டெர் கூறினார்.

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் படி, இத்தாலியில் 21,000 மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    ஐரோப்பாவில் இத்தொற்றால் அதிகம் பேர் உயிரிழந்தது இத்தாலியில்தான்.

    இத்தாலி

    பட மூலாதாரம், Getty Images

  15. இனி பொருளாதாரம் என்னவாகும்?

    கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுமென பிரதமர் நரேந்திர மோதி அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த நீட்டிப்பு எவ்விதமான விளைவுகளை பொருளாதாரத்திலும் சமூகத்திலும் ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் பேராசிரியர் டாக்டர் ஜெ. ஜெயரஞ்சன். பேட்டியிலிருந்து...

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று மேலும் 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267ஆக உயர்ந்துள்ளது.

    கொரேனாவிற்கு எதிராக போராட, தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்காக, 134.64 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. நிதி அளித்த அனைத்து மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்

  17. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

    தமிழ்நாட்டில் மேலும் 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம், தற்போது நோயுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்துவருகிறது என்று அவர் கூறினார்.

    அவர் வேறு என்ன பேசினார்?

    • மத்திய சுகாதாரத் துறை, உலக சுகாதார நிறுவனம் கூறுகின்ற வகையில் தமிழக அரசு இந்த நோய்த் தடுப்புப் பணியை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
    • இந்த நடவடிக்கையின் காரணமாக நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது
    • இந்நோய்க்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்களை இருப்பு வைப்பதில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது.
    • 3371 வென்டிலேட்டர்கள் தமிழகத்தில் உள்ளன. அரசிடம் 2501 வென்டிலேட்டர்கள் உள்ளன. 870 வென்டிலேட்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன.
    • மும்மடிப்புக் கவசங்கள் 65 லட்சம் இருப்பில் உள்ளன. என் 95 முகக் கவசங்கள் 3 லட்சம் இருக்கிறது. பிபிஇ எனப்படும் முழு உடல் பாதுகாப்பு ஆடை 2 லட்சம் இருப்பில் உள்ளது.
    • டெஸ்ட் கிட்களைப் பொறுத்தவரை ஐசிஎம்ஆர் அளித்த 20 ஆயிரம் கிட்கள், டாடா நிறுவனம் வழங்கிய கிட்கள் 40,000, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் 1,35,000 வாங்கியுள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 95,000 கிட்கள் உள்ளன. 68,000 பிசிஆர் கிட்கள் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    தமிழக முதல்வர்

    பட மூலாதாரம், FACEBOOK

  18. அமெரிக்காவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என எதிர்பார்ப்பு

    அமெரிக்காவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    வியாழக்கிழமை அன்று புதிய விதிமுறைகளை அதிபர் டிரம்ப் அறிவிப்பார் என்று தெரிகிறது.

    முன்னதாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த, அல்லது தளர்த்த அதிபர் டிரம்பிற்கு அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சை எழுந்தது.

    இந்த வாரத் தொடக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர தனக்கு "முழு அதிகாரம்" உள்ளதாக கூறினார்.

    ஆனால், பின்னர் அந்த முடிவு அந்தந்த மாகாண ஆளுநர்களை சார்ந்தது என ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.

    அமெரிக்கா

    பட மூலாதாரம், getty images

  19. கொரோனாவால் உலகம் அடைந்த நன்மை என்ன?

    கொரோனா உலகம் முழுவதும் மக்களை வீட்டிலேயே முடக்கி வருகிறது. போர் நிகழ்கிற பகுதிகளில், பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும், தற்போது குறைந்தது 100 கோடிக்கும் அதிகமான மக்களும் அதை உணர்ந்திருக்கிறார்கள். சரி, கொரோனாவால் உலகம் அடைந்த நன்மை என்ன?

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி, "கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு ஊரடங்கு உத்தரவு தீர்வாகாது"

    கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு ஊரடங்கு உத்தரவு தீர்வாகாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    ஊரடங்கு என்பது வைரஸ் தொற்றை தற்காலிகமாக தள்ளிப்போடுமே தவிர, இது முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் இந்தத் தொற்று வேகமாக பரவும் என அவர் கூறியுள்ளார்.

    "நாம் அவசர நிலையில் இருக்கிறோம். ஒட்டுமொத்த இந்தியாவும் இணைந்து இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக போராட வேண்டும். நாம் நன்கு யோசித்து செயல்பட வேண்டியுள்ளது" என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    "கொரோனா வைரசிற்கு எதிரான ஆயுதம், அதிக பரிசோதனைகளை செய்வது மட்டுமே. நாம் 10 லட்சம் மக்களில் 199 பேரை பரிசோதிக்கிறோம். கடந்த 72 நாட்களில் நாம் செய்த பரிசோதனையை எடுத்துக் கொண்டால், ஒரு மாவட்டத்திற்கு சுமார் 350 பரிசோதனைகளையே செய்திருக்கிறோம்.

    வரும் நாட்களில் பெருமளவு பரிசோதனை நடத்தப்பட வேண்டும். நோயாளிகளை கண்டறிவதோடு, வைரஸ் எந்த பகுதிக்கு நகர்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் பேசிய ராகுல் காந்தி, கோவிட் 19 தொற்றை எதிர்த்து போராடுவதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் பங்கு முக்கியம் என்று குறிப்பிட்டார்.

    சிறந்த மாவட்ட நிர்வாகத்தால், கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றிகரமாக இத்தொற்றை கட்டுப்படுத்தி இருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    "பிரதமர் நரேந்திர மோதியுடன் எனக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக இணைந்து போராட வேண்டிய நேரம்" என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு