இயற்கை கழிவுகளைக் கொண்டு கலைப் பொருள்களைச் செய்யும் அரசுப் பள்ளி மாணவர்கள்

காணொளிக் குறிப்பு, இயற்கை கழிவுகளைக் கொண்டு கலைப் பொருள்களைச் செய்யும் அரசுப் பள்ளி மாணவர்கள்

புதுச்சேரி சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியுடன் கலைப் பொருட்களை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கிராமப் பகுதிகளில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பயனற்ற பொருட்களான தேங்காய் நார், தேங்காய் மட்டை, பனை ஓலை, மற்றும் மரங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களை கலைப் படைப்புகளாக மாற்ற மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார் இங்குள்ளஆசிரியர்.

குறிப்பாக மணிக்கூண்டு, டவர், பேனா, இருக்கை, ஊஞ்சல், பென்சில், தேர், பல்லக்கு என கலை நயமிக்க பொம்மைகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இது பற்றிய காணொளி.

தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

தொகுப்பாக்கம்: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :