ஆயிரத்துக்கும் மேலான வெளவால்களுக்கு 21 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்து வரும் குடும்பம்

காணொளிக் குறிப்பு, ஆயிரத்துக்கும் மேலான வெளவால்களுக்கு 21 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்து வரும் குடும்பம்

ஆயிரத்துக்கும் மேலான பூச்சித் தின்னி வெளவால்களுக்கு 21 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்து வருகிறது புதுச்சேரியில் உள்ள இந்த குடும்பம்.

புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பிரபு பொன்முடி என்பவர், இயற்கை மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அதீத பற்று கொண்டுள்ளார். அதன் வெளிப்பாடாகவே கடந்த 21 ஆண்டுகளாக இவரது வீட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வௌவால்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். சூழலியல் ரீதியாக வௌவால்கள் மிக முக்கியமான இனம் என்பதால் அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் மனிதர்களுக்கு இருப்பதாக இவர் கருதுகிறார்.

பொதுவாக வௌவால்கள் குறித்து தவறான புரிதல் மக்களிடையே இருக்கிறது. பறவைகள், மற்ற விலங்கினங்களுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை வௌவால்களுக்கு மனிதர்கள் கொடுப்பதில்லை என பிபிசி தமிழுடன் பிரபு பொன்முடி பகிந்துகொண்டார்.

காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

படத்தொகுப்பு: ஜெரின் சாமூவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :