இந்தியாவின் தொழில் வாய்ப்புகளைத் தட்டிச் செல்லும் சீனா, வங்கதேசம்

காணொளிக் குறிப்பு, இந்தியாவின் தொழில் வாய்ப்புகளைத் தட்டிச் செல்லும் சீனா, வங்கதேசம்

'வேலைக்கு ஆட்கள் தேவை' என்று எழுதப்பட்ட பதாகைகளால் நிரம்பியிருந்த ஊரில், தொழில் நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டதால், 'கட்டடம் வாடகைக்கு விடப்படும்' என்ற பதாகைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆயத்த ஆடைகளை சீனாவில் இருந்து வங்கதேசத்துக்கு இறக்குமதி செய்தால் வரி விலக்கு உள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்தால் செலுத்த வேண்டிய வரியைவிட வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு இயக்குமதி செய்தால் செலுத்த வேண்டிய வரி குறைவு. அதனால், சீன சரக்குகள் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைகின்றன.

வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் சீன சரக்குகளை கட்டுப்படுத்த, வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகளுக்கு வரியை அதிகரிக்க வேண்டும் என்பது பின்னலாடை துறையினரின் முக்கியமான கோரிக்கையாக உள்ளது.

காணொளி தயாரிப்பு: விக்னேஷ்.அ

ஒளிப்பதிவு: கு. மதன் பிரசாத்

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :