அறிவியல் ஆய்வு: 203 நுண்ணுயிரிகளை வகைப்படுத்திய தமிழ்நாடு மாணவர்கள்

காணொளிக் குறிப்பு, ஆஷிஸ், வினிதா இருவருமாகச் சேர்ந்து, 203 நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து பதிவு செய்துள்ளார்கள்.

அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ் பரங்கிப்பேட்டையில் செயல்படும் கடல் உயிரியல் உயர் ஆய்வு மையத்தின் இணை பேராசிரியர் முனைவர்.அ.சரவணகுமார் அவருடைய மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு குறித்துப் பேசியபோது, "ஆஸிஸ் மற்றும் வினிதாவுக்கு இவற்றின் மீதுள்ள அதீத ஆர்வத்தையும் ஆய்வு மனப்பான்மையையும் தெரிந்துகொண்டதால், அவர்களை இந்த ஆய்வில் ஈடுபடுத்தினேன்," என்று கூறுகிறார்.

இருவருமாகச் சேர்ந்து, 203 வகைகளைக் கண்டறிந்து, அவற்றின் ஒளிப்பட ஆதாரங்களோடு, அவை சாப்பிடும் உணவு, உருவ அமைப்பு என்று அனைத்தையும் பதிவு செய்துள்ளார்கள். கடல்நீர் நுண்ணுயிரிகளில் இவ்வளவு வகைகளைக் கண்டறிந்து வகைப்படுத்தியது இதுவே முதல்முறை.

தயாரிப்பு: க.சுபகுணம் & நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: