தனுஷ் நடிப்பில் வாத்தி படம் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளது
தமிழ் திரைப்படங்களை போலவே பிற மொழி படங்களிலும் நடிப்பதில், நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே அவர் இரண்டு ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'தி கிரே மேன்', ஹிந்தியில் வெளியான 'ஆட்ராங்கி ரே' ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களை தவிர்த்து, பல மொழிகளில் உள்ள சினிமா ரசிகர்களிடமும் நடிகர் தனுஷை கொண்டு சேர்த்தது.
சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களை போலவே பிற மொழி படங்களிலும் நடிப்பதில், நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே அவர் இரண்டு ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'தி கிரே மேன்', ஹிந்தியில் வெளியான 'ஆட்ராங்கி ரே' ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களை தவிர்த்து, பல மொழிகளில் உள்ள சினிமா ரசிகர்களிடமும் நடிகர் தனுஷை கொண்டு சேர்த்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நேரடியாக தெலுங்கு திரையுலகில் நுழையும் வண்ணம் வெளியாகியிருக்கும் `வாத்தி` திரைப்படம் அவரது ரசிகர்களிடயே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்